உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

ஓமலுார்: தர்மபுரி, பாலக்கோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 44. அரசு பஸ் டிரைவரான இவர், ஓமலுார் அரசு பஸ் பணிமனையில் பணிபுரிகிறார். கடந்த, 5 மாலை, 5:30 மணிக்கு, ஓமலுார் - மூக்கனுார் இடையே செல்லும் பஸ்சை, தாராபுரம் அருகே ஓட்டிச்சென்றார். அப்போது தாராபுரம் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு கோவில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஹாரன் அடித்தார். இதில் ஊர்வலத்தில் சென்ற தாராபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரன், 35, வாக்குவாதம் செய்து தாக்கியதாக, வெங்கடேசன் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர். நேற்று குமரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை