உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் பற்றி அவதுாறாக பேசியவர் கைது

முதல்வர் பற்றி அவதுாறாக பேசியவர் கைது

இடைப்பாடி : முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தி.மு.க., நிர்வாகிகள் பற்றியும் அவதுாறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, பக்கநாடு அருகே குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பாலு, 36; டிப்பர் லாரி டிரைவரான இவருக்கு ஜோதி, 34, என்ற மனைவி, 13, 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த இவர், கடந்த இரு மாதங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ம.க.,வில் இணைந்துள்ளார்.பக்கநாடு ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சேலம் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளருமான வெங்கடாசலபதி, நேற்று பூலாம்பட்டி போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: பக்கநாடு அருகே குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவரான பாலு, 36, முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தி.மு.க., நிர்வாகிகள் பற்றியும் அவதுாறாகவும், ஆபாசமாகவும் ஆடியோவில் பேசி 'கடக்கன் முடக்கன் பாய்ஸ்' என்ற பெயரில் ஆடியோவை பரப்பியுள்ளார்.இது பற்றி, நேற்று முன்தினம் பாலுவிடம் கேட்டபோது, அப்படித்தான் பேசுவேன் என்றும், கத்தியை எடுத்து என்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்த, பூலாம்பட்டி எஸ்.ஐ., மலர்விழி, பாலுவை நேற்று கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை