அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடும் விழா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்-திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் டிச., 4 ல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச., 10 ல் மஹா ரத தேரோட்டம், 13 ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க, நேற்று காலை, 6:40 மணிக்கு கன்யா லக்-னத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி, தங்க கொடி மரத்தின் அருகே சம்மந்த விநாயகருக்கு, அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பந்தக்-காலிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்-திரம் முழங்க, ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல், உள்ளிட்ட அனைத்து பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளன.