உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டட பணியை எதிர்த்தவர் மீது தாக்கு; ஊர் கவுண்டர், மகன்கள் மீது வழக்கு

கட்டட பணியை எதிர்த்தவர் மீது தாக்கு; ஊர் கவுண்டர், மகன்கள் மீது வழக்கு

சேலம் : சேலம் நரசோதிப்பட்டி, ரெட்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லைவேந்தன், 30. இவர் வீடு அருகே, 569 சதுரடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஊர் கவுண்டர் ராஜேந்திரன், 10 நாட்களுக்கு முன் கட்டடம் கட்டியுள்ளார். தில்லைவேந்தன் தட்டிக்கேட்க, அவர்களுக்குள் பிரச்னை எழுந்தது.இதுகுறித்த புகார்படி அழகாபுரம் போலீசார், 'சர்வேயர் மூலம் நிலத்தை அளவீடு செய்து கொள்ள வேண்டும். அதுவரை கட்டடம் கட்டக்கூடாது' என எழுதி வாங்கி கொண்டு, இருவரையும் அனுப்பினர்.ஆனால், 27 காலை, அந்த இடத்தில் மீண்டும் கட்டுமானப்பணியை தொடங்க முயன்றனர். இதற்கு தில்லைவேந்தன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் கவுண்டர் தலைமையிலான கும்பல் தாக்கியதில், படுகாயமடைந்த தில்லைவேந்தன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஊர் கவுண்டர், அவரது மகன்கள் சுரேஷ், தினேஷ் மீது அழகாபுரம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி