ஆர்.வி., லங்க் கேரில் ஆஸ்துமா கண்டறியலாம்
ஆர்.வி., லங்க் கேரில்ஆஸ்துமா கண்டறியலாம்சேலம், செப். 25-சேலம், 4 ரோடு, காமராஜ் காலனியில் உள்ள, ஆர்.வி., லங்க் கேரில், குழந்தைகளுக்கு பிரத்யேக ஆஸ்துமா கண்டறியும் கருவி மூலம், எளிதாக ஆஸ்துமாவை கண்டறியலாம். அனைத்து நுரையீரல் நோய்கள், புகைபிடிக்கும் பழக்கத்தால் வரும் சளி, நுரையீரல் பாதிப்புகள், காசநோய் கண்டறிதல், கொரோனாவுக்கு பின் மூச்சு வாங்குதல், வறட்டு இருமல், நெஞ்சில் கர் கர் போன்ற சத்தம், அடிக்கடி சளி, இருமல், தொந்தரவு ஆகியவற்றுக்கு, மருத்துவர் வேல்ராஜ் தலைமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அண்மையில் ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில், வேல்ராஜின் ஆராய்ச்சியில் சீலிகோஸிஸ்(நுரையீரல் கல், மண், துாசி படிதல்) கட்டுரை தேர்வு செய்யப்பட்டது. அதை சிறப்பாக வழங்கி, வேல்ராஜ் தாயகம் திரும்பியுள்ளார் என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.