உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.ஐ.ஆர்., குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

எஸ்.ஐ.ஆர்., குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சேலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கல்லுாரி பொறுப்பாளர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. வீடுதோறும் சென்று படிவம் வழங்கும் பணியை, டிச., 4க்குள் முடிக்க வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்லுாரி பொறுப்பாளர்கள், மாணவர்களுக்கு இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.அருகில் உள்ளவர்களுக்கு தேர்தல் கமிஷன் வழிமுறைகளை எடுத்துக்கூறி, தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது, அதில் நிரப்ப வேண்டிய விபரங்கள், சந்தேகம் எழுந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் குறித்து, நீங்கள் தெரிந்து கொண்டு, மக்களுக்கு உதவ வேண்டும். வீடு வீடாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் மற்றும் இணைய வழியில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களில் உள்ள தகவல்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வங்கி முன்னோடி மேலாளர் செந்தில்குமார் உள்பட மாணவர்கள் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பேரணிசேலம் மாநகராட்சி சார்பில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில், பேரணியை, உதவி கமிஷனர் தமிழ்வேந்தன் தொடங்கி வைத்தார். உழவர் சந்தை, கடைவீதி, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பேரணியில், ஏராளமானோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபடாமலும், தகுதியற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதேபோல் ஏற்காட்டில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் மாவட்ட துணை கலெக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். தாசில்தார் செல்வராஜ் முன்னிலையில் பேரணி, காந்தி பூங்காவில் தொடங்கி, ஏற்காடு டவுன், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்று ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அப்போது மக்களுக்கு, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தேர்தல் தாசில்தார் ஷர்மிளாபானு, ஒன்றிய கமிஷனர் முருகன், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.கையெழுத்து இயக்கம்தலைவாசல் தாலுகா அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். அதில் தாசில்தார் பாலாஜி, உதவி வாக்காளர் அலுவலர், தனி தாசில்தார்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மக்கள், கையெழுத்து பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ