உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில்லா தீபாவளிக்கு விழிப்புணர்வு பேரணி

விபத்தில்லா தீபாவளிக்கு விழிப்புணர்வு பேரணி

ஆத்துார், ஆத்துார் தீயணைப்பு துறை மற்றும் ரோட்டரி ஆத்துார் மிட் டவுன் கிளப் சார்பில், விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலையத்தில் தொடங்கிய பேரணி, உடையார்பாளையம் வழியே, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை அடைந்தது. அப்போது தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல், தீ தடுப்பு பணி குறித்து, வீரர்கள் எடுத்துரைத்து, மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். கிளப் தலைவர் நரசிம்மகுமார், செயலர் மதன்லால், பொருளாளர் பிரபு, ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மாட்டுக்காரனுார் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில், ஓமலுார் தீயணைப்புத்துறை சார்பில், தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை