தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த சிசு மீட்பு
ஆத்துார் : சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சியில் முல்லைவாடி வழியே வசிஷ்ட நதி செல்கிறது. அதன் நடைபாதை தரைப்பால பகுதியை யொட்டி, இறந்த நிலையில் சிசு கிடந்தது குறித்து, நேற்று, ஆத்துார் டவுன் போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தனர்.அங்கு சென்ற போலீசார், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் ஓடும் பகுதியில் இறங்கிச் சென்று பெண் சிசுவை மீட்டனர். போலீசார் கூறுகையில், 'பிறந்து சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் வீசியுள்ளனர். இக்குழந்தையை வீசியவர், குழந்தையின் தாய் குறித்து விசாரணை நடக்கிறது. கடந்த, 6ல் கெங்கவல்லியில், சாக்கடையில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இறந்து கிடந்தது. தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது' என்றனர்.