உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை

காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை

சேலம் :தமிழகத்தில் ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை; 8 முதல், பிளஸ் 2 வரை, முழு ஆண்டு கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, 7ம் வகுப்பு வரை, முதல் பருவ பாடம் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. 8 முதல், பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, 17 முதல், நேற்று வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், அக்., 5 வரை, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு நீதிமன்ற அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ