பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் உள்ள, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், காட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்-திரன், 52. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அவ-ரது பைக்கில் இருந்து, 50 பீர் பாட்டில்களை எடுத்து வந்து, டாஸ்மாக் கடைக்குள் வைத்துள்ளார். இதை பார்த்த, நடுவ-லுாரை சேர்ந்த மக்களில் சிலர், 'வெளியில் இருந்து எதற்கு மது-பாட்டில் எடுத்து வருகிறீர்கள். எங்கிருந்து வாங்கி வந்தது? கலப்-படம் செய்த பாட்டிலா?' என, கேள்வி எழுப்பினர். அவர் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். இதனால் கடையை முற்றுகை-யிட்டு, விற்பனையாளர் பெரியசாமியிடம், மக்கள் வாக்குவாதம் செய்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஜெயன் தலைமையில் அலுவலர்களும் வந்து, டாஸ்மாக் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்-டனர்.