மேலும் செய்திகள்
கைப்பந்து போட்டியில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்
10-Jul-2025
வாழப்பாடி, பள்ளி கல்வித்துறை சார்பில், வாழப்பாடி வட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கடந்த ஜூலை, 15 முதல், 31 வரை, பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.அதேபோல் பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடம், சிறுவர்களுக்கான பூப்பந்து போட்டியில் முதலிடம், சிலம்ப போட்டியின், 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனர். இதனால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் தெய்வீகன், தற்காலிக உடற்கல்வி ஆசிரியை ரேவதி ஆகியோரை பாராட்டினார்.
10-Jul-2025