உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை

மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை

ஆத்துார், ஆத்துார் அருகே நைனார்பாளையத்தில், 18.42 லட்சம் ரூபாயில், மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட நைனார்பாளையம் கிராமத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டுவதற்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18.42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமையில் நேற்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவக்கி வைத்தார். ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை