உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுவதற்கு பூமி பூஜை

ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுவதற்கு பூமி பூஜை

ஓமலுார், ஓமலுார் திண்டமங்கலம் ஊராட்சி, பனங்காட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறையுடன் கூடிய, புதிய கூடுதல் கட்டடம் கட்டவும், முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறையுடன் கூடிய, புதிய கூடுதல் கட்டடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. ஓமலுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மணி பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், மாநில ஜெ.,பேரவை துணை செயலர் விக்னேஷ், முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், விமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி