உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சியில் வெற்றி ஊர்வலம் பா.ஜ.,வினர் ஆலோசனை

ஊராட்சியில் வெற்றி ஊர்வலம் பா.ஜ.,வினர் ஆலோசனை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள, சேலம் பா.ஜ., லோக்சபா தொகுதி அலுவலகத்தில், சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மற்றொரு மாவட்ட பொதுச்செயலர் ராமச்சந்திரன், மாவட்ட செயலர் கந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும்படி நாளை மாலை, தேசிய கொடியை ஏந்திய படி நரசிங்கபுரத்தில் ஊர்வலம் தொடங்கி ஆத்துாரில் நிறைவடைய உள்ளது. அதில் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது; மாநில தலைமை அனுமதி பெற்று, ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து, ஊராட்சிகளில் வெற்றி ஊர்வலத்தை நடத்துதல் குறித்து ஆலோசித்தனர். மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சின்னுராஜ், ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன்ராஜ், வீரபாண்டி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி