இரு தரப்பும் உடன்பாடு: 8ல் கிறிஸ்து அரசர் தேர் திருவிழா
கெங்கவல்லி: கெங்கவல்லியில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழாவுக்கு, கடந்த, 17ல், கொடியேற்றம் நடந்தது. 24ல் தேர் திருவிழா ஏற்பாடு நடந்தது. அப்போது கிறிஸ்து அரசர், ஆரோக்கியமாதா உள்பட, 3 தேர்களில் சிலைகளை எடுத்து வைப்பது தொடர்பாக, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட, திருவிழா நிறுத்தப்பட்டது. மறுநாள் பேச்சில், டிச., 1ல் தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இருப்பினும் மற்றொரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. இதனால் இருதரப்பினரிடம் நேற்று முன்தினம், சேலம் ஆயர் ராயப்பன், ஆத்துார், கெங்கவல்லி பங்குத்தந்தைகள் பேச்சு நடத்தினர். அதில் சுமுக தீர்வு ஏற்பட்டு, வரும், 8 மாலை, 6:00 மணிக்கு தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.