ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
வாழப்பாடி:வாழப்பாடி அருகே ஏரியில் மீன் பிடித்தபோது, தவறி விழுந்த தம்பியும், அவரை காப்பாற்ற முயன்ற அண்ணனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம், ஒட்டப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் --- சந்தியா, தம்பதிக்கு தர்ஷன், 8, விஷால், 7 ஆகிய மகன்கள் இருந்தனர். அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், இருவரும் முறையே 3, 2ம் வகுப்பு படித்தனர்.இந்நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு சகோதரர்கள், சந்தனப்புடையார் ஏரிக்கு, நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, ஏரி பள்ளத்தில் விஷால் தவறி விழுந்தார்.அவரை காப்பாற்ற முயன்ற தர்ஷனும், பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார். தீவிர தேடுதலுக்கு பிறகு மாலை, 6:00 மணிக்கு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.