உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் பாக முகவர் கூட்டத்துக்கு அழைப்பு

கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் பாக முகவர் கூட்டத்துக்கு அழைப்பு

ஆத்துார், நவ. 6-தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:வீரபாண்டி சட்டசபை தொகுதியில் உள்ள இளம்பிள்ளை பேரூர், ஆட்டையாம்பட்டி பேரூர்; சேலம் தெற்கு ஒன்றியம்; பனமரத்துப்பட்டி ஒன்றியம், பேரூர்; மல்லுார் பேரூருக்கு, சேலம் கலைஞர் மாளிகையில், வரும், 7ல் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.அதே நாளில் ஏற்காடு தொகுதியில் உள்ள அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம், பேரூர்; அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம், ஏற்காடு ஒன்றியம், வாழப்பாடி வடக்கு ஒன்றியம், பேளூர், வாழப்பாடி பேரூர், வாழப்பாடி தெற்கு ஒன்றியம் ஆகியவற்றுக்கு, வாழப்பாடியில் உள்ள ஸ்டாலின் அறிவாலயத்தில், பாக முகவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.ஆத்துார் தொகுதியில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, தெற்கு, மத்திய ஒன்றியம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூர், ஏத்தாப்பூர் பேரூர் ஆகியவற்றுக்கு, வாழப்பாடியில் உள்ள ஸ்டாலின் அறிவாலயத்தில், வரும், 8ல் கூட்டம் நடக்க உள்ளது. அதே நாளில் ஆத்துார் ஒன்றியம், கீரிப்பட்டி பேரூர், ஆத்துார், நரசிங்கபுரம் நகரம் ஆகியவற்றுக்கு, ஆத்துார் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.கெங்கவல்லி தொகுதியில் உள்ள, கெங்கவல்லி ஒன்றியம், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தெடாவூர் பேரூர் ஆகியவற்றுக்கு கெங்கவல்லியில் உள்ள ஸ்ரீகுமரன் மஹாலில், வரும், 9ல் கூட்டம் நடக்க உள்ளது. அதே நாளில் தலைவாசல் வடக்கு, தெற்கு, மத்திய ஒன்றியம், வீரகனுார் பேரூர் ஆகியவற்றுக்கு தலைவாசல், கொங்கு திருமண மண்டபத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை