ரூ.12.59 லட்சம் மோசடி கார் நிறுவன காசாளர் கைது
சேலம்: சேலம், சூரமங்கலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தின் மனித வள தலைமை அலுவலர் இளவரசன், 46. இவர் சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் அளித்த மனு:சங்ககிரியில் உள்ள, தங்களது நிறுவன கிளையில் காசாளராக, சங்-ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த நதியா, 33, என்பவர், 2022 ஏப்.29 முதல் பணிபுரிந்தார். கடந்த ஜூலை, 10 முதல் நவ., 23 வரையான காலகட்டத்தில், நிறுவனத்துக்கு கார் சர்வீஸ் கொண்டு வந்த வாடிக்கையாளர் விபரங்களை முறையாக தெரி-விக்காமல், 12.59 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்-கப்பட்டது. திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து நேற்று வழக்குப்பதிவு செய்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நதியாவை கைது செய்தனர்.