கல்லுாரி மாணவரை தாக்கிய கார் டிரைவர் கைது மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
ஆத்துார்: கல்லுாரி மாணவரை தாக்கிய கார் டிரைவரை, போலீசார் கைது செய்த நிலையில், மேலும், 2 பேரை கைது செய்யக்கோரி, வி.சி., கட்சியினர், மாணவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர்.சேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர் பாலாஜி, 19. ஆத்துார் அரசு கல்லுாரியில், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 16 மாலை, 4:00 மணிக்கு, சிறுவாச்சூர் மாரி-யம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றபோது, அதே பகு-தியை சேர்ந்த, கார் டிரைவர் கதிரவன், 22, என்பவர், பாலாஜியை தாக்கியுள்ளார். இதையறிந்து, மாணவரது உறவினர்கள் வந்து தட்டிக்கேட்க, இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி-யது. உடனே பாதுகாப்பு கருதி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் பாலாஜி புகார்படி, வன்கொடுமை உள்பட, 4 பிரிவுகளில், தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து, கதிரவனை, நேற்று கைது செய்தனர்.ஆனால், மேலும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதியம், 1:40 மணிக்கு, ஆத்துார் அரசு மருத்துவமனை முன், ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் நாராயணன் தலைமையில், வி.சி., கட்சியினர், மாணவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்-டனர்.சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட, அங்கு வந்து, ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'மாணவர் புகாரில் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தகராறு குறித்து முழு விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பாலாஜியின் அண்ணன், அவரது நண்பர் நவீனிடம், 6 மாதங்க-ளுக்கு முன், 'சூப்பர் ஸ்பிளண்டர்' பைக்கை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாலாஜி கேட்க, நவீனும் பைக்கை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் முன்விரோதம் உருவானது. கடந்த, 16ல், நவீனின் நண்பர் கதிரவன், மாணவரை தாக்கியுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இரு சமூகத்தினரும் புகார் கூறு-வதால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் தொடர்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.