மேலும் செய்திகள்
சிறுமியை சீண்டிய 'பெருசு' கைது
17-Nov-2024
கருவறையில் புகுந்தவாலிபருக்கு 'கவனிப்பு'ஆத்துார், டிச. 1-ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, திருமண் கரட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அங்கு நேற்று இரவு, 10:30 மணிக்கு புகுந்த ஒருவர், உண்டியலை உடைத்துள்ளார். ஆனால் முடியாததால் கருவறைக்கு சென்றுள்ளார்.அங்குள்ள, 'சிசிடிவி'யை, அறங்காவலர் முருகேசன், அவரது மொபைல் போனில் பார்த்து மர்ம நபர் இருப்பது குறித்து, தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். 11:00 மணிக்கு அங்கு சென்ற கோவில் நிர்வாக குழுவினர், மக்கள், அந்த வாலிபரை பிடித்து நன்கு கவனித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.விசாரணையில் தம்மம்பட்டியை சேர்ந்த தினேஷ், 23, என தெரிந்தது. திருட முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேமராவை பார்த்த உடனே சென்றதால், உண்டியல் பணம், நகைகள் தப்பின.
17-Nov-2024