உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அத்திப்பட்டி, சூரியூரில் நுழைந்த 60 பேர் மீது வழக்கு

அத்திப்பட்டி, சூரியூரில் நுழைந்த 60 பேர் மீது வழக்கு

பனமரத்துப்பட்டி,சேலம் மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஜருகுமலை அடிவாரத்தில், 1911ல், பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அப்போது கோவிந்தவாடி, காளியூர், அத்திப்பட்டி, சூரியூர் உள்பட, 7 ஊர்கள் காலி செய்யப்பட்டன. சேலத்துக்கு காவிரி குடிநீர் வந்த பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஏரி வறண்டதால், கிணறு தோண்டி வயல் அமைத்து, வீடு கட்டி மக்கள் விவசாயம் செய்தனர். ஆனால், 2005ல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஏரியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அத்திப்பட்டி, சூரியூர் நிலத்தை திரும்ப கேட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆடி 1 என்பதால், அத்திப்பட்டி, சூரியூர் பகுதிக்கு விவசாயிகள் சென்று, அங்குள்ள கோவிலில் பொங்கல் வைத்து தேங்காய் சுட்டு, விவசாய நிலம் கிடைக்க வேண்டுதல் வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள், ஏரியில் அத்துமீறி நுழைந்து, குடிசை அமைக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பனமரத்துப்பட்டி போலீசில் புகாரளித்தனர்.நேற்று காலை போலீசார், அத்திப்பட்டிக்கு சென்று, பிடாரி கோவிலில் இருந்த விவசாயிகளை, ஏரிக்குள் செல்லக்கூடாது என, அறிவுறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள், பனமரத்துப்பட்டி ஸ்டேஷனுக்கு வந்தனர். அங்கு போலீசார் பேச்சு நடத்தி, 'அனுமதியின்றி ஏரிக்குள் செல்லக்கூடாது. நீதிமன்றம் தீர்வு காண வேண்டும்' என அறிவுறுத்தினர். ஆனாலும் அத்திப்பட்டி, சூரியூர் பகுதிக்கு அனுமதியின்றி நுழைந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தியதாக, 60 பேர் மீது பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை