மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கூட்டத்தில் வேட்டி, சேலை வழங்கல்
10-Jul-2025
ஓமலுார், ஓமலுார், பச்சனம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 58. கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, முன்னாள் தலைவி நிர்மலாவின் கணவர். தி.மு.க.,வை சேர்ந்தவர். நேற்று முன்தினம், பைப்லைன் ஒப்பந்த பணிக்கு, பச்சனம்பட்டி அருகே பூங்கா நகரில் இருந்தார். அங்கு வந்த பச்சனம்பட்டியை சேர்ந்த சண்முகம் உள்பட, 5 பேர், முத்துக்குமாரை தாக்கியதாக கூறி, அவர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஓமலுார் போலீசார் விசாரித்தனர். நேற்று, பச்சனம்பட்டியை சேர்ந்த, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் விவசாய பிரிவு மாவட்ட துணை செயலர் சண்முகம், இளவரசன், ஜோதிகுமரன், பிரதீப், குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.முத்துக்குமார் தாக்கியதாக ஜோதிகுமரன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Jul-2025