கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மாவட்டத்தில் வரும் 29ல் தொடக்கம்
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்டத்தில் வரும், 29ல் தொடங்கி, ஜன., 28 வரை, அனைத்து கால்நடைகளுக்கும், 8வது சுற்று கோமாரி நோய் தடுப்-பூசி போடும் பணி இலவசமாக நடக்கிறது. கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி, காய்ச்சல், கொப்ப-ளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய். பண்ணையில் சுகா-தாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் கோமாரிநோய் பரவுகிறது. அதனால், சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைதல், எருது-களின் வேலைத்திறன் பாதிப்பு, கன்றுகள் அதிகம் இறப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளால் கால்நடை வளர்ப்போர் பெரும் இழப்புக்கு ஆளாக நேரிடும்.இந்த கொடிய நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம், எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவச-மாக போடப்படுகிறது. எனவே, மாவட்டம் முழுவதும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, அந்தந்த ஊராட்சி கால்நடை மருந்தக பகுதிகளில், 149 குழுக்கள் மூலம் முன்னதா-கவே விளம்பரம் செய்து, 8 வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பை கால்-நடை வளர்ப்பு விவசாயிகள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.