உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண் நுரையீரலில் மாட்டிக்கொண்ட மூக்குத்தி திருகாணி அறுவை சிகிச்சையின்றி அகற்றிய காவேரி மருத்துவமனை சேலம்:

பெண் நுரையீரலில் மாட்டிக்கொண்ட மூக்குத்தி திருகாணி அறுவை சிகிச்சையின்றி அகற்றிய காவேரி மருத்துவமனை சேலம்:

சேலம் காவேரி மருத்துவமனைக்கு, இருமல், ரத்தம் கலந்த சளியால் பாதிக்கப்பட்ட நிலையில், 55 வயது பெண் வந்தார். அவருக்கு, சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தொற்று, ரத்த உறைவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. கூடவே அயல் பொருட்கள் இருக்கலாம் என்ற ஐயத்தை உண்டாக்கியது. இதனால் மூச்சுக்குழாய் ஊடுருவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ரத்த உறைவுகள் அகற்றப்பட்டன. ஆனாலும் நுரையீரலுக்குள் ரத்தக்கசிவு இருப்பது தெரிந்தது. தொடர்ந்து மருத்துவர்கள், சி.டி.நுரையீரல் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு உலோக பொருள் உள்ளே இருப்பது உறுதியானது. தொடர்ந்து சி--ஆர்ம் படம் பிடிப்பு, துல்லிய மூச்சுக்குழாய் ஊடுருவி மூலம் மருத்துவக்குழுவினர், அது மூக்குத்தி திருகாணி என்பதை உறுதி செய்து வெளியே எடுத்தனர்.இந்த சிகிச்சை முறையை வழி நடத்திய நுரையீரல் மருத்துவ நிபுணர் ராமச்சந்திரன் கூறுகையில், ''அறுவை சிகிச்சை இல்லாமல் ஊடுருவியை வைத்தே திருகாணியை வெளியே எடுத்துள்ளோம்,” என்றார்.இதுகுறித்து காவேரி மருத்துவமனை இயக்குனர் செல்வம் கூறுகையில், ''எங்கள் மருத்துவ நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பெண்ணுக்கு இருந்த பிரச்னைக்குரிய காரணத்தை கண்டறிந்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சையின்றி மூக்குத்தி திருகாணியை அகற்றியுள்ளனர். இது அரிதான சாதனை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை