மத்திய மாவட்ட தி.மு.க., முகவர் கூட்டம் அறிவிப்பு
சேலம்: தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை: கடந்த 13ல், மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., அலுவலகத்தில், அக்., 16ல்(இன்று) காலை, 10:00 மணிக்கு, மேற்கு சட்டசபை தொகுதி பாக முகவர் கூட்டம் நடக்கிறது. அதேபோல், 20ல், வடக்கு தொகுதிக்கு சங்கர் நகர் வன்னிய குல சத்திரியர் மண்டபம், 27ல் தெற்கு தொகுதிக்கு அம்மாபேட்டை கொங்கு திருமண மண்டபம் அன்று மாலை ஓமலுார் தொகுதிக்கு ஓமலுார் எம்.ஆர்.பி., திருமண மண்டபத்தில் நடக்கின்றன. இந்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட தொகுதி நிர்வாகிகள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.