உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நினைவு தினம் நடத்த இடையூறு சந்தன வீரப்பன் மனைவி ஆவேசம்

நினைவு தினம் நடத்த இடையூறு சந்தன வீரப்பன் மனைவி ஆவேசம்

நினைவு தினம் நடத்த இடையூறுசந்தன வீரப்பன் மனைவி ஆவேசம்மேட்டூர், அக். 19-''என் கணவரின், 20ம் ஆண்டு நினைவு தினத்தை நடத்த, போலீசார் பல்வேறு இடையூறு செய்தனர்,'' என, சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார்.சந்தன கடத்தல் வீரப்பன் உடல், சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த மூலக்காடு கிராமத்தில் அணை கரையோரம் புதைக்கப்பட்டுள்ளது. நேற்று வீரப்பனின், 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று நினைவஞ்சலி செலுத்தினர், பின்னர் முத்துலட்சுமி கூறியதாவது:என் கணவர் இறந்து, 19 ஆண்டுகளாகி விட்டது. தற்போது, 20ம் ஆண்டு நடக்கிறது. அதற்காக நினைவு நாளில் சமாதி அருகே பந்தல் போடக்கூடாது உள்பட பல்வேறு இடையூறுகளை தந்தனர். இரு ஆட்சியிலுமே, எங்களுக்கு போலீசார் இடையூறாக இருக்கின்றனர். அதை போலீசார் தவிர்த்து கொள்ள வேண்டும். விரைவில், வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்ட தயாராக உள்ளோம். அதற்கு போலீசார் அனுமதி தர வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை