உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் விழா அமைச்சர்கள் ஆய்வு

முதல்வர் விழா அமைச்சர்கள் ஆய்வு

சேலம், முதல்வர் ஸ்டாலின், வரும், 11ல், ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வர உள்ளார். 12ல் மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைப்பார். பின் கார் மூலம் சேலம், இரும்பாலை அருகே அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், லட்சம் பயனாளிகளுக்கு, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இதற்கான முன்னேற்பாடு குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தனர்.விழா மேடை, முதல்வர் வந்து செல்லும் பாதை, பயனாளிகள் அமரும் பகுதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு குறித்து, அதிகாரிகளிடம், வரைபடங்களை பார்த்து ஆலோசனை செய்தனர். கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ