உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமிக்கு பிறந்தது குழந்தை கணவர் மீது பாய்ந்தது போக்சோ

சங்ககிரி: இடைப்பாடி அருகே திருமணமான, 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்-துள்ளனர்.இடைப்பாடி தாலுகாவை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி மணிகண்டன், 26. இவர் அதே பகுதியை சேர்ந்த, 17வயது சிறு-மியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த பிப்., 2ல் மணிகண்டன் சிறுமியை திரு-மணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை கடந்த, 10ல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, மேட்டூர் அரசு மருத்துவ-மனை அதிகாரிகள் அளித்த தகவல்படி, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயினி, சிறுமியை திரு-மணம் செய்து கர்ப்பமாக்கிய மணிகண்டன் மீது 'போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை