உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்

கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்

சேலம்: சேலத்தில் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில், கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில சிறுபான்-மையின ஆணைய தலைவர் அருண், தொடங்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதி-களில் வலம் வந்தது. அப்போது கிறிஸ்தவ வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும், கிறிஸ்தவ பாடல்கள் பாடியபடியும் வந்தனர். நிறைவாக சூச-னம்மா மண்டபத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து திருச்சபை சார்பில் கலைநிகழச்சி நடந்தது. மேலும் அருட்தந்தை-யர்கள், மிஷனரிகள் கவுரவிக்கப்பட்டனர். கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஜஸ்டின்ராஜ், செயலர் விமல்மோசஸ், பொருளாளர் மைக்கேல், இணை பொருளாளர் ஜான் பிலிப் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ