உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி குடிமகன் பலி

தாமரையை பறிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி குடிமகன் பலி

இடைப்பாடி: தாரமங்கலம், வனிச்சம்பட்டியை சேர்ந்தவர் மருதமலை, 36. திருமணம் ஆகாத இவர், விசைத்தறி கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 26. இவர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு வெள்ளாளபுரம், பச்சம்-பட்டிக்கு சென்றனர். அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பள்-ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது.அதில் அதிகளவில் தாமரை மலர்ந்திருந்ததால், அதை பறிக்க, 'மது'போதையில் இருந்த மருதமலை இறங்கியுள்ளார். எதிர்பா-ராத விதமாக மூழ்கிவிட்ட நிலையில், சுரேஷ் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து, மருதமலையை தேடி, இறந்த நிலையிலேயே மீட்டனர். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !