உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க, 4வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அதில் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தல்; நீண்டகாலம் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மீது விரைவாக தீர்வு கண்டு ஓய்வூதிய பலன்களை தாமதமின்றி வழங்குதல்; தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுரவ தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலர் ரவி, மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை