உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் அரசு கலை கல்லுாரியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

சேலம் அரசு கலை கல்லுாரியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில், ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். கட்டடங்களை திறந்து வைத்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:மாணவ, மாணவியர் கல்வியில் மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளிலும் மேம்படும் வகையில், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில், 5,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சேலம் அரசு கலைக்கல்லுாரியில் மட்டும், 734 பேர் பயன் பெற்றுள்ளனர். டிஜிட்டல் நுாலகம் வேண்டும் என மாணவ, மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.மேயர் ராமச்சந்திரன், கல்லுாரி முதல்வர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை