துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு
ஆத்துார்: நரசிங்கபுரம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 54. நரசிங்க-புரம் நகராட்சியில் துாய்மை பணியாளராக இருந்தார். நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்து, பணி பதி-வேட்டில் கையெழுத்திட்டார்.தொடர்ந்து பணிக்கு செல்ல நடந்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஆறுமுகத்துக்கு மனைவி சங்கீதா, 42, மகள்கள் வர்ஷிதா, 8, வர்ணிகா, 8, உள்-ளனர்.தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலை-மையில் கவுன்சிலர்கள், ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.