உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் கோப்பை போட்டி: 48,969 பேர் முன்பதிவு

முதல்வர் கோப்பை போட்டி: 48,969 பேர் முன்பதிவு

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் கோப்பை விளை-யாட்டு போட்டி முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 10 முதல், 24 வரை, பல்வேறு இடங்களில் நடக்கின்றன. கடந்த, 2ல் முன்பதிவு முடிந்த நிலையில், 48,969 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கு வரும், 10ல் வாலிபால், கூடைப்பந்து, மேசைப்பந்து, செஸ் போட்டிகள் காந்தி விளையாட்டு அரங்கத்-திலும், கேரம் போட்டி ஒய்.எம்.சி.ஏ., வளாகம்; ஹாக்கி போட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி; இறகுபந்து போட்டி கோட்டை மாநகராட்சி கிளப்; கைப்பந்து போட்டி ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.கால்பந்து போட்டி செயின்ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; கிரிக்கெட் போட்டி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி சேலம் பெரியார் பல்-கலையில் நடக்க உள்ளன. செப்., 11ல் பள்ளி மாணவியருக்கு வாலிபால், செஸ், கூடைப்-பந்து, மேசைப்பந்து போட்டி காந்தி விளையாட்டு அரங்கம்; கேரம் போட்டி ஒய்.எம்.சி.ஏ., உள் வளாகம்; ஹாக்கி போட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி; இறகுபந்து போட்டி கோட்டை மாநகராட்சி கிளப்; கைப்பந்து போட்டி ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தடகள போட்டி பெரியார் பல்கலை; கல்லுாரி மாணவர்களுக்கு கால்பந்து போட்டி செயின்ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; கிரிக்கெட் போட்டி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்-ளன. வரும், 12ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நீச்சல் போட்டி காந்தி விளையாட்டு அரங்கம்; கல்லுாரி மாணவர்களுக்கு கைப்-பந்து போட்டி ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; மாற்றுத்-திறனாளிகளுக்கு அனைத்து போட்டிகள் காந்தி விளையாட்டு அரங்கம்; கல்லுாரி மாணவியருக்கு ஹாக்கி போட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளன. தொடர்ந்து, 13, 14, 15, 16, 19ல், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அடுத்த-டுத்து நடக்க உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை