உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்

அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில், அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்புக்கு, 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதன் நியமன அறிவிப்பு, ஒரு வாரத்துக்கு முன் வெளியானது. பேளூரில், 4 பேர், குறிச்சியில் ஒருவர் என, 5 பேர் உறுப்பினர்க-ளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சின்னமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை எனக்கூறி, அந்த ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த அங்கமுத்து, மணி, விவேகானந்தன், ராஜி, பாலு, கணபதி, வேலுமணி, குணசேகரன், செந்தில்குமார், சாமி-யப்பன் என, 10 கிளை செயலர்கள், தி.மு.க.,வில் இருந்து வில-குவதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அந்த ஊராட்சி, 9வது வார்டு கிளை செயலர் செந்-தில்குமார் கூறியதாவது:தான்தோன்றீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்க-ளாக, பேளூரில், 3 பேர், சின்னமநாயக்கன்பாளையத்தில், 2 பேர், பாரம்பரியமாக நியமிக்கப்பட்டு வந்தனர்.சில ஆண்டுக்கு முன், பேளூரில், 3 பேர், சின்னமநாயக்கன்பா-ளையம், குறிச்சியில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர். தற்போது சின்னமநாயக்கன்பாளையத்தில் ஒருவர் கூட நியமிக்கப் பட-வில்லை.ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், ஊர் பாரம்பரியத்தை விட்-டுக்கொடுத்ததாக மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முறை-யிட்டும் மாவட்ட செயலர், நடவடிக்கை எடுக்காததால், தி.மு.க.,வின் இருந்து விலகுவதாக மக்களிடம் தெரிவித்து, தலைமைக்கும் தகவல் அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி