கோவை - ஹிசார் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம்: அக்., 2 முதல், ஹிசார் - கோவை வார ரயில்; அக்., 5 முதல் கோவை-ஹிசார் வார ரயில் ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, 13 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.