கோவை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் தாமதம்
கோவை எக்ஸ்பிரஸ்7 மணி நேரம் தாமதம்சேலம், அக்.17-கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று, 7 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை பகுதியில் மழை காரணமாக, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாக இயக்கப்பட்டும் வந்தன. நேற்று மதியம், 3:15 மணிக்கு கிளம்ப வேண்டிய கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று, 7 மணி நேரம் தாமதமாக இரவு, 10:20 மணிக்கு கிளம்பியது. இதனால் முன்பதிவு செய்திருந்த, சேலம், ஈரோடு, திருப்பூர் பயணிகள் அவதிக்குள்ளாகினர்