உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

இடிந்து விழுந்த பால தடுப்பு கட்டைகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டை வழியே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கோரையாறு ஓடை குறுக்கே மேம்பாலம் உள்ளது. அதன் வடக்கு புறத்தில் இருந்த தடுப்பு கட்டைகள், 10 அடி துாரத்துக்கு மேல், கடந்த, 15 இரவு இடிந்து விழுந்தன. அங்கு மின் விளக்கு இல்லாததால், தடுப்பு உடைந்தது தெரியாமல் விபத்து அபாயம் உள்ளது.மேலும் இந்த பாலத்தின் இருபுறமும் மேற்பகுதி, கீழ் பகுதிகளில் குப்பை, ஆயில், இறைச்சி கழிவை கொட்டி வருகின்றனர். அதிகளவில் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தவிர இரவில் குப்பைக்கு தீ வைப்பதால் புகை மண்டலம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக, பாலத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, மீண்டும் கொட்டாதபடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை