மேலும் செய்திகள்
வானவில் மன்ற போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
23-Oct-2024
வீரபாண்டி வட்டார அளவில்மாணவர்களுக்கான போட்டிவீரபாண்டி, நவ. 19-இலக்கிய மன்ற மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். வீரபாண்டி வட்டாரத்துக்குட்பட்ட, 29 பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, நேற்று வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடந்தது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த வாரம் வட்டார அளவிலான, வானவில் மன்றங்களை சேர்ந்த மாணவர்களுக்கான போட்டிகள் நடத்து முடிந்த நிலையில், நேற்று இலக்கிய மன்றம் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. அடுத்து அறிவியல் மன்ற மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடக்கவுள்ளது.
23-Oct-2024