மேலும் செய்திகள்
வி.சி., மாவட்ட செயலரை கைது செய்ய பா.ம.க., மனு
06-Nov-2024
வன்னிய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்துணை கமிஷனர், டி.எஸ்.பி.,க்களிடம் புகார்சேலம், நவ. 7-சேலம் மாநகர் மாவட்ட வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி, பா.ம.க.,வின், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட கட்சியினர், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று, துணை கமிஷனர் நிலவழகனிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து கார்த்தி கூறியதாவது:வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழிக்கு, வி.சி., கட்சியை சேர்ந்தவர்கள் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சமூக விரோத கும்பல் மீது வழக்குப்பதிந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில், வி.சி., கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம், பசுமை தாயக மாநில இணை செயலர் சத்திரியசேகர், வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள் சிவா, ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.அதேபோல் வன்னியர் சங்கம் சார்பில், மேட்டூர் டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் சேலம் மாவட்ட வன்னியர் சங்க செயலர் ராமகிருஷ்ணன், பா.ம.க., மாநில இளைஞரணி செயலர் ராஜசேகரன், மேட்டூர் நகர செயலர் மதியழகன், மகளிரணி நிர்வாகிகள், கொளத்துார், மேச்சேரி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன், பா.ம.க., மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமாரிடம் மனு அளித்தனர். ஆத்துார், இடைப்பாடி, சங்ககிரியிலும், பா.ம.க.,வினர் மனு அளித்தனர்.
06-Nov-2024