மேலும் செய்திகள்
பைக் மீது வேன் மோதி இருவர் உயிரிழப்பு
15-Sep-2024
மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்தி, 35. உதவியாளர் மனோ, 30. இருவரும் நேற்று மதியம், 3:00 மணிக்கு, சேலத்தில் இருந்து மினி வேனில் பாமாயில் டின்களை ஏற்றிக்கொண்டு மேச்சேரி கடைகளுக்கு வினியோகிக்க சென்றுகொண்டிருந்தனர்.மேச்சேரி, புறாக்கூண்டு அருகே சென்றபோது, வேனின் ஒரு டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை பக்கவாட்டில் கவிழ்ந்து டின்கள் சேதமாகி பாமாயில் சாலையில் கொட்டியது. விபத்தில் கார்த்தி, மனோ காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியே வந்த, அமைச்சர் ராஜேந்திரன் காரில் இருந்து இறங்கி, விபத்து குறித்து கேட்டறிந்து இருவருக்கும் ஆறுதல் கூறினார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2024