கண்டமான தீயணைப்பு வாகனங்கள் ஏலம்
சேலம், கண்டமான தீயணைப்பு வாகனங்கள், நவ., 20ல் ஏலம் விடப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட தீயணைப்பு நிலைய அறிக்கை:சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய தீயணைப்பு நிலையங்களில், கண்டமான நிலையில் உள்ள, 12 தீயணைப்பு வாகனங்களை ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிர்மான ஏலம் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், வரும், 27 முதல் நவ., 17 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்து வழங்க, நவ., 19 கடைசி நாள்.ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி, நவ., 20 காலை, 11:00 மணிக்கு, சேலம், மணியனுாரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் நடக்க உள்ளது. முழு நிபந்தனைகள், வாகன பட்டியல் ஆகியவை விண்ணப்ப படிவத்துடன் மேற்கண்ட, அந்தந்த மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வழங்கப்படும். விபரங்களுக்கு, 94450 86376, 94450 86370, 94450 86337, 94450 86360 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.-----------------