உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொடர்ந்து வழிப்பறி மீண்டும் குண்டாஸ்

தொடர்ந்து வழிப்பறி மீண்டும் குண்டாஸ்

சேலம்:சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரை கடந்த, 2ல் கத்திமுனையில் மிரட்டி, 5,000 ரூபாய் பறித்துச்சென்ற வழக்கில், அந்தேரிப்பட்டியை சேர்ந்த சஞ்சய், 23, என்பவரை, கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.இவர் மீது, 2022 முதல், பல்வேறு வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்ததும், ஏற்கனவே குண்டாஸில் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் மீண்டும் குண்டாஸில் கைது செய்ய, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !