ஒப்பந்த ஊழியர் சாவு
மேட்டூர்: மேச்சேரி, தெத்திகிரிப்பட்டியை சேர்ந்தவர் காண்-டீபன், 43. இவருக்கு மனைவி சங்கீதா, 33, ஒரு மகன், மகள் உள்ளனர். பொட்டனேரி தனியார் ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய காண்டீபன், கடந்த, 21 காலை, ஆலையில் மயங்கி விழுந்து இறந்தார். நிவாரணம் கேட்டு, அவரது உறவினர்கள், காண்டீபன் உடலை, தெத்-திகிரிப்பட்டியில், மேட்டூர் - தொப்பூர் நெடுஞ்சா-லையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடலை, போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உடலை பெற்றுக்கொள்ளவில்லை.இந்நிலையில் போலீசார், ஆலை ஒப்பந்ததாரர், காண்டீபன் குடும்பத்தினர் பேச்சு நடத்தினர். அதில் நேற்று காலை, ஆலை நிர்வாகம் சார்பில், 1.5 லட்சம், ஒப்பந்ததாரர், 1.5 லட்சம் என, 3 லட்சம் ரூபாய் காண்டீபன் குடும்பத்துக்கு வழங்-கப்பட்டது. இதையடுத்து, காண்டீபன் உடலை பெற்று, தெத்திகிரிப்பட்டி கொண்டு சென்று எரி-யூட்டினர்.