உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.14 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.14 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்

ஓமலுார்: ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. விற்பனையாளர் ஆனந்தி தலைமை வகித்தார். சுற்றுவட்டார விவசாயிகள், 281 மூட்டைகளில், கொப்பரையை கொண்டுவந்தனர். வியாபாரிகள், ஒரு கிலோ கொப்பரை, 70 முதல், 131.73 ரூபாய் வரை ஏலம் கோரினர். 121.32 குவிண்டால் கொப்பரை மூலம், 14.55 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.வரத்து சரிவுசேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த, 3 வாரங்களாக கொப்பரை வரத்து சரிந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய ஏலத்தில் வெறும், 1,769 கிலோ கொப்பரையை மட்டும், விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 74 முதல், 126 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம், 2,679 கிலோ வரத்து இருந்தது. மழைக்காலம் தொடங்கியதால் வரத்து சரிந்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி