உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.15.60 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.15.60 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்

இடைப்பாடி, கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. அதில் விவசாயிகள், 85 மூட்டை களை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 160 முதல், 188 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 121 முதல், 138 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 8.02 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், முதல் தரம், 40 ரூபாய் விலை குறைந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.அதேபோல் ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. 117 மூட்டைகளில், விவசாயிகள் கொண்டு வந்தனர். கிலோ, 70 முதல், 202 ரூபாய் வரை ஏலம் கோரினர். 41.15 குவிண்டால் மூலம், 7.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தொடர்ந்து, 2 மூட்டை தட்டைப்பயிர் ஏலம் நடந்தது. கிலோ, 50 முதல், 55 ரூபாய் வரை கோரினர். இதன்மூலம், 3,740 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை