மேலும் செய்திகள்
பத்திரம் நகல் எழுதுவோர் கவன ஈர்ப்பு போராட்டம்
26-Oct-2026
சேலம்; தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில், சேலம், உடையாப்பட்டி பைபாஸ் அருகே, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். பத்திரப்பதிவு துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து வரதராஜன் கூறுகையில், ''தனியார் மயமாக்கினால் பத்திரப் பதிவு செய்யப்படும்போது முக்கிய தகவல் கசிய வாய்ப்புள்ளது. அத்துடன் இத்தொழிலை நம்பியுள்ள பத்திர நகல் எழுதுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,'' என்றார்.துணை செயலர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம், மேட்டூர், ஓமலுார், சங்ககிரி, இடைப்பாடி, ஏற்காடு, ஆத்துார், கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
26-Oct-2026