உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிருபர் விவகாரம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

நிருபர் விவகாரம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

வீரபாண்டி : சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், கான்ஸ்டபிள் ராமச்சந்திரன், நேற்று முன்தினம் காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அதை, தனியார், 'டிவி' நிருபரான, சேலத்தை சேர்ந்த யுவராஜ், பைல் போனில் படம் பிடித்தார். இதனால் அவரை, ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, உடனே ராமன், ராமச்சந்திரன் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தார். தொடர்ந்து இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ