உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ விபத்தில் குடிசை சேதம்

தீ விபத்தில் குடிசை சேதம்

மகுடஞ்சாவடி: எர்ணாபுரம், பழைய சந்தப்பேட்டையை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ஆனந்த், 45. இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மதியம், 12:00 மணிக்கு அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர், குடம், பக்கெட்டுகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை சேதமானது. வீட்டிலிருந்த துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை நாசமாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி