உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி டவுன் பஞ்.,ஆபீஸில் கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

கெங்கவல்லி டவுன் பஞ்.,ஆபீஸில் கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

கெங்கவல்லி, கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், இரண்டு பெண் கவுன்சிலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில், சுயேட்சை கவுன்சிலர்கள் 10 வது வார்டு வகிதாபானு, 12வது வார்டு அமுதா ஆகியோர் நேற்று காலை, 11:00 மணியளவில், கெங்கவல்லி டவுன் பஞ்.,அலுவலகத்தின் செயல் அலுவலர் அறையில், 'தங்களது வார்டு பிரச்னைகள், குறைகளை சரி செய்ய வேண்டும்' என, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.செயல் அலுவலர் ஜனார்த்தனன், சேலம் கலெக்டர் அலுவலகம் சென்றிருந்த நிலையில், கவுன்சிலர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். தகவலறிந்த கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் எழுந்து செல்ல மறுத்துவிட்டனர். மாலை, 6:30 மணியளவில், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் சாந்தி, இரு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், 'செயல் அலுவலர் மீட்டிங் சென்றுள்ளதால் வரும், 11ல், இது தொடர்பாக பேசுவதாக தெரிவித்துள்ளார்' என, இன்ஸ்பெக்டர் கூறியதால், இரவு, 7:00 மணியளவில், 8 மணி நேரத்திற்கு பின், இரு கவுன்சிலர்களும் எழுந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை